உங்கள் வலைப்பதிவில் அதிக பின்னூட்டங்கள் வேண்டுமா?

நண்பர்களே நலம்தானே?

தமிழ் நடிகை மும்தாஜின் இடுப்பளவு போல் வலைப்பதிவுகள் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி பெருத்துக் கொண்டே போவதால், இணையத்து வாசகனுக்கு எதைப் படிப்பது? எதை மிதிப்பது? என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. சில வலைப்பதிவுகளின் பின்னூட்டங்கள் மூன்று இலக்கத்தையும் தாண்டி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்க சில வலைப்பதிவுகளின் பின்னூட்ட எண்ணிக்கைகள் நோஞ்சான் போல பரிதாபமாக நின்று சில மணித்துளிகளுக்குள் காணாமற் போய்விடுகின்றன.இன்னும் சில வலைப்பதிவுகள் நான் கணக்குப் பரீட்சையில் வாங்கிய மார்க்கையே பிடிவாதமாக வாங்கிக் கொண்டிருக்கின்றன.

எனவே அந்த மாதிரியான வலைப்பதிவர்களின் துயர் துடைக்கவும், அவர்களின் வலைப்பதிவுகளிலும் பின்னூட்டங்கள் பொங்கி வழிய இலவசமாக நீங்கள் கேட்காமலேயே சில யோசனைகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. இலவசம் என்றதும், இந்திய அரசு சமீபத்தில் வழங்கிய குறுந்தகடு போல் வேலைக்கு ஆகாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டாம். இந்த யோசனைகளைப் பின்பற்றினால் நிச்சயம் வெற்றிதான்.

பதிவின் தலைப்பு மிக முக்கியம். நீங்கள் பத்திரிகைகள் விற்கும் கடை வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் பத்திரிகைத் துண்டின் தலைப்புச் செய்திகளை கவனித்தால் 'நடிகை விபசார வழக்கில் கைது' என்று தலைப்பிட்டு இருக்கும். பத்தாவது ரிசல்ட் வந்த போது கூட தூங்கி எழுந்து நிதானமாக பேப்பர் வாங்க வந்த நீங்கள் (ரிசல்ட் தெரிஞ்சதுதானே?) அரக்கப் பரக்க பத்திரிகையை வாங்கி தலை போகிற வேலையாக முதலில் அந்த செய்தியை படிப்பீர்கள். ஆனால் அந்தச் செய்தி நீங்கள் எதிர்பார்த்தபடியில்லாமல் உங்கள் அபிமான நடிகைகளையெல்லாம் ஒரம் கட்டி விட்டு தெலுங்கிலோ, மலையாளத்திலோ நடிக்கும் ஒரு தங்கை வேஷ நடிகையைப் பற்றியதாக இருக்கும். உங்களுக்கு 'சீ' யென்று ஆகிவிடும்.

ஆகவே வாசகனை கவர்ந்திழுக்க தலைப்பு மிக முக்கியம். சில உதாரணங்கள்:

'நான் பார்ப்பனவாதியல்லாத தலித்வாதி'

நீங்கள் எந்த ஜாதியென்பதை ஜாக்கிரதையாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஏதாவது ஒரு ஜாதிக்காரர்களைப் பற்றி கண்ட மாதிரி எழுதவும். இதனால் 'ஜாதிகள்ல எனக்கு நம்பிக்கை கிடையாதுப்பா' என்று வெளியே சொல்லிக் கொண்டிருக்கும் படித்த பிதாமகன்கள், இந்த தலைப்பால் இயல்பாக ஆவேசப்பட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஓடிவருவார்கள். அப்புறமென்ன, அவர்கள் ஒன்று எழுத, நீங்கள் ஒன்று எழுத (அதாவது மாற்றி மாற்றி திட்டிக் கொள்வதை சொல்கிறேன்) பின்னூட்ட மழைதான்.

யாராவது ஒரு பிரபலத்தை கண்ட மேனிக்கு திட்ட வேண்டும்.

'ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு' அல்லது 'பிரபாகரன் ஒரு போராளி அல்ல, பெருச்சாளி'

உள்ளே ஆதாரப் பூர்வமான விஷயமொன்றும் இருக்க வேண்டுமென்பதில்லை. படிக்கும் போது சரித்திரப் பாடத்தில் ஜல்லியடித்திருப்பீர்களே, அதைப் போல் ஏதாவது ஜல்லியடித்து விட்டு கூடவே தலைப்பை நியாயப் படுத்துகிறாற் போல் சம்பந்தப் பட்டவரை பச்சையாக (அல்லது உங்களுக்குப் பிடித்த நிறத்தில்) திட்டவும். சம்பந்தப்பட்ட நபரை உங்களுக்குப் பிடித்தமானவராக கூட இருக்கலாம். ஆனால் பின்னூட்டம் என்கிற முக்கிய இலக்கை நாம் குறி வைத்திருக்கும் போது, இம்மாதிரியான அபிமானங்களை தியாகம் செய்துவிடத்தான் வேண்டும்.

சகட்டு மேனிக்கு எல்லார் வலைப்பதிவிலும் (உள்ளடக்கம் என்ன இருக்கிறதையெல்லாம் படித்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதீர்கள்) சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க .... என்று ஒன்லைனரில் கமெண்ட் போட்டு விட்டு வரலாம். இதனால் எனக்கென்ன பயன் என்று அப்பாவியாக கேட்காதீர்கள். இது ஒரு முதலீடு மாதிரி. இதனால் கவரப்பட்ட சம்பந்தப்பட்ட மகாஜனங்கள், அடடா! நான் எழுதியிருக்கறதை மதிச்சு ஒருத்தன் பாராட்டியிருக்கறானே... என்று உங்கள் வலைப்பதிவில் வந்து உங்கள் பதிவை பதிலுக்கு பாராட்டுவார். விருந்தோம்பல் என்பது தமிழனின் ஆதார நாகரிகமன்றோ? (நம்ம கல்யாணத்துக்கு மொய் எழுதினவனுக்கு அவன் வீட்டு கல்யாணத்தப்போ எவ்வளவு எழுதினான்னு கரெக்டா அதே அளவு மொய் எழுதறவங்கதானப்பா நாம....)

வலைப்பதிவுக்குன்னு சில முக்கிய பதிவர்கள் (முக்காத பதிவர்கள் கூட) இருக்காங்க. முக்கியமா அவங்க பதிவுக்கு போய் அவங்க காது கிழியறா மாதிரி ஜங்....ஜங்குன்னு ஜால்ரா அடிச்சுட்டு வரணும். சுத்தி சுத்தி இவங்க பதிவுக்கு மட்டும்தான் போகணும். மத்த பதிவுல என்ன முக்கியமான விஷயமா இருந்தாலும் படிக்கலாமே தவிர, தப்பித்தவறி கூட நம்ம தலய காட்டிடடக்கூடாது. இல்லாட்டி உங்க இமேஜ் போயிடும். நீங்க பின்னூட்டமிடாத வலைப்பதிவாளர்களும் உங்களை முக்கியமான ஆளென்று சரியான முறையில் தவறாக யூகித்து நீங்கள் அவர் வலைப்பதிவில் எப்படியாவது பின்னூட்டமிடுவதற்காக உங்கள் கவனத்தை கவர்வதற்காக தொடர்ந்து உங்கள் வலைப்பதிவிலோ, அல்லது நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைப் பாராட்டி பின்னூட்டமிட்டுக் கொண்டே வருவார். இதனால் உங்கள் வலைப்பதிவில் மட்டுமல்லாது மற்றவர்களின் வலைப்பதிவுகளிலும் உங்களைப் பற்றிய பின்னூட்டங்களே அதிகமிருக்கும்.

இன்னும் பல யோசனைகள் கைவசம் உள்ளன. நேரமிருக்கும் போது எடுத்து விடுகிறேன்.

25 மறுமொழிகள்:

Blogger சுந்தரவடிவேல் said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க ....

பைதிவே நாளக்கி மொய்யோட நம்ம பதிவுக்கு வருவீங்கதானே? :))

2:57 PM  

Blogger கொங்கு ராசா said...

:-)

(ஒன்லைனர் போட்டாத்தான தப்பு.. இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்ன செய்வீங்க...??)

3:11 PM  

Blogger வசந்தன்(Vasanthan) said...

நல்லாயிருக்கு.
ஏதோ சொல்ல வேணும்போல கிடக்கு. இட்லிவடையில சொல்ல அது 300 தாண்டி எகிறினத நினைச்சு பேசாமப் போறன்

4:35 PM  

Anonymous Anonymous said...

இப்புடியே அதிக பின்னூட்டம் வேணுமான்னு தலைப்புல கேட்டே நெறைய பின்னூட்டம் வாங்குறதே இப்பல்லாம் ஒரு பதிவாப் போச்சு. கெழமைக்கு ரெண்டு இதே பாணில வருது. இங்கையே பின்னூட்டம் நூறு தாண்டும்போல கெடக்கே.

5:10 PM  

Blogger Agent 8860336 ஞான்ஸ் said...

அக்கினிக்குஞ்சு- ஆண்பாலா?
ஆண்பால் என்றால் அக்கினிக்குஞ்சின் பெண்பால் என்ன?

தொடர்ச்சி
இங்கே...

5:43 PM  

Blogger மாயவரத்தான்... said...

சரி சரி.. உங்களுக்கு எத்தனை பின்னோட்டம் வேணும்.. சட்டு புட்டுன்னு சொல்லுங்க.. ஆள் ரெடி பண்ணனும்லே?!

6:52 PM  

Anonymous Anonymous said...

இணையமே பிச்சைப்பாத்திரம் மாதிரிதான். :-) பலதும் இருக்கும். உனக்கு இன்னா வோணுமோ, அத்தை நீ எடுத்துக்கோ நைனா

2:29 AM  

Blogger Moorthi said...

//ஜல்லியடித்து//

ஜல்லியடிக்கிறது, ஜாட்டான், பிறவாளுமை, பின்நவீனத்துவம், அச்சு ஊடகம், வெகுஜனபத்திரிக்கை.. இந்த வார்த்தை எல்லாம் இப்ப எல்லா எடத்திலயும் புழங்குது. பயன்படுத்துற படுவாக்களுக்கு அர்த்தம் தெரியுமா தெரியாதோ...எனக்கே தெரியலை.

அப்புறம் இந்த கோஷ்டி வெச்சி பின்னூட்டுறது, ஜாதி பாத்து எழுதுறது, ஜாதி பாத்து பின்னூட்டுறது, தொடுப்பு வெச்சிக்கிறது(சின்னவீடுமேரி) எல்லாம் நடந்துட்டுதான் இருக்கு.

5:09 AM  

Blogger குமரேஸ் said...

"சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க ...."

இட்லிவடையின் தமிழ் எழுத்துக்களின் சுடுகாடு (அல்லது ) வலைப்பதிவு. - Wednesday, April 20, 2005

http://idlyvadai.blogspot.com/2005/04/blog-post_20.html

இங்கு போய்ப்பாருங்கள், அப்பிடியே அவர் (இட்லிவடையின் டாப் 10) எழுதிய 10 விடயங்களுக்கும் தனித்தனியே கோணார் உரை, பரிமேலழகர் உரை போல் நீங்கள் விழக்கவுரை என்று இன்னமும் 9 பதிவு பேடலாம்

5:33 AM  

Anonymous ranga said...

Date:12/05/2005 URL: http://www.thehindu.com/2005/05/12/stories/2005051212651300.htm
--------------------------------------------------------------------------------

Front Page

Railway official from Tamil Nadu is IAS topper

Staff Reporter
NEW DELHI: Railway traffic service official Srinivasan Nagarajan has bagged the top spot in the Union Public Service Commission Civil Services (Main) Examination. The results were announced here on Wednesday.

In all, 422 candidates, including 67 women, have been recommended for appointment. While the top 20 includes six women, 193 candidates have been selected from the general category, including three physically challenged persons, 118 from Other Backward Classes, 64 from Scheduled Castes and 47 from the Scheduled Tribes category. The number of vacancies reported by the Government for IAS, IFS and IPS is 91, 20 and 88, for the Central Services Group `A' 235 and the Central Services Group `B' 19.

It may have been his fourth and last attempt but for Tirunelveli-based Mr. Nagarajan, it could not have ended on a better note. A B.Tech from BITS Pilani, he had sociology and geography as options. Professionals have clearly scored, with the top 10 comprising an engineer, two doctors and an IIM graduate. Basant Garg and Gaurav Uppal are both doctors and hold the second and third ranks this year. Basant has cleared it in his first attempt.

Manish Kumar, ranked fifth, is an IIM graduate. He had to choose between a New York posting with handsome salary and one that would help him serve his own people.

"I decided to take the UPSC exam when I got the offer for a job in New York. Although the money was great, I wanted to do something here. I was not sure if coming back would be easy once I went there, so I decided to write the exam instead. It is my third attempt but I am glad to have finally made it," he said. Interestingly, at least six of the top 10 were trained at an institute here. "We were confident of having our students in the top 10 but six of them, including the top three, was completely unexpected. It has been a brilliant year for us," said Sri Rangam, the man behind the Delhi branch of Sri Ram Institute.
© Copyright 2000 - 2005 The Hindu

9:17 AM  

Anonymous Anonymous said...

Very good satire.

- Raja

1:35 PM  

Blogger Ramya Nageswaran said...

வெகு நாட்கள் கழித்து வாய்விட்டு சிரித்தேன். மிக்க நன்றி!

2:52 PM  

Blogger A n& said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க ....
hehehehe

5:17 PM  

Blogger enRenRum-anbudan.BALA said...

//சகட்டு மேனிக்கு எல்லார் வலைப்பதிவிலும் (உள்ளடக்கம் என்ன இருக்கிறதையெல்லாம் படித்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதீர்கள்) சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க .... என்று ஒன்லைனரில் கமெண்ட் போட்டு விட்டு வரலாம்.
//
Pl. note that I read this post COMPLETELY and then only commented. I appreciate your terrific sense of humour and things you have written are actually happening HERE ;-)))

Pl. keep it up !!!!!!!!!!!

5:52 PM  

Anonymous Anonymous said...

You may want to look at the comments in this one..

http://rajniramki.blogspot.com/2005/07/blog-post_19.html

Follows the exact pattern written in this blog..

=====
Murugesh

7:42 PM  

Blogger KARTHIKRAMAS said...

கருத்துக்களோடு (இதுல கருத்து இருக்கா? ;-)) முற்றிலும் வேறுபட்டாலும், நகைச்சுவையாய் உள்ளது.

8:48 PM  

Anonymous Anonymous said...

http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_14.html

http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_12.html

http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_11.html

இதெல்லாம் அந்த வகைதானா? ;-)

10:46 PM  

Blogger முகமூடி said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க ....

...என்று சொல்லத்தான் ஆசை... ஆனா உங்க பதிவுல பின்னூட்டம் இட்டா நீங்க முக்கிய பதிவர்னு நான் ஒத்துக்கற மாதிரி ஆயிடும்... அதுக்கு என் மனசாட்சி இடம் தராததால இங்க பின்னூட்டம் இடறதா இல்ல

முகமூடி - படிக்க படிக்க பின்னூட்டம் இட தூண்டும் பதிவு

7:11 AM  

Blogger முகமூடி said...

முகமூடி - இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்...

7:14 AM  

Blogger கோபி(Gopi) said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க ....

(பதிவை முழுசாப் படிச்சிட்டு மீதிப் பின்னூட்டத்தை பதியறேன்)

//இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்...//

வீ.பீ.பீ யில அனுப்பி வைக்கலாமே "கயா" அட்ரஸ் போட்டு :-P

8:14 AM  

Anonymous Anonymous said...

Exactly reflecting the current blog's position. Keep it up. Very humourous.

- Kumar

6:29 PM  

Anonymous Anonymous said...

'ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு' அல்லது 'பிரபாகரன் ஒரு போராளி அல்ல, பெருச்சாளி'
இந்த வரிசையில் பாப்புலரான பெயர்கள் (இன்றைய நிலவர்ப்படி). நாளை வரிசை மாறலாம்.
சங்கர்
சுஜாதா
ரஜினிகாந்த்
பெரியார்

5:46 PM  

Blogger மாயவரத்தான்... said...

வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!

6:22 PM  

Anonymous Anonymous said...

very nice

- Ramesh

5:11 PM  

Blogger feman said...

arumai nanbare...mudhugil varuduvathai pol illamal mookileye adithaal pola irukkirathu...nermarayanaa vimarsanam...paaraatukkal.veru enna...ippozuthu naan ungal madhipirkuriya muthugai sorigiren...en mugappu pakkathai parkumaaru neradiyaagave ketukkolgiren!!!nandri.
http://www.adave.bloggerspot.com

9:42 PM  

Post a Comment

<< முகப்பு

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது